சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதான செய்யது அலி மீது '‛உபா'

Added : பிப் 10, 2020
Share
Advertisement

நாகர்கோவில் : வில்சன் எஸ்.ஐ. கொலை வழக்கில் கைதான செய்யது அலி மீதும் 'உபா' சட்டம் பாய்ந்தது. இவரை ஏற்கனவே உள்ள வழக்கில் தென்காசி போலீசாரும் கைது செய்தனர்.

களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அப்துல்சமீம் தவுபிக் என இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த செய்யது அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் 'உபா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


மேலும் ஒரு வழக்கு


தென்காசியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் செய்யது அலி தேடப்பட்டு வந்தார். வில்சன் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் போலீசார் நாகர்கோவில் வந்து செய்யது அலியை அந்த வழக்கில் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X