பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரூ 8,501 கோடியில் 6 ரயில்வே திட்டங்கள் அறிவிப்பு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Budget, Railway, 6 Plans, ரயில்பாதை, திட்டங்கள், மத்திய பட்ஜெட், நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் காட்பாடி விழுப்புரம் இடையே இரண்டாவது ரயில்பாதை உட்பட 6 ரயில்வே திட்டங்கள் ரூ 8,501 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து வெளியிடப்படுவதால் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லைடில்லியில் இருந்து முழு தகவல்கள் வந்ததும் தெரிவிக்கிறோம் என தெற்கு ரயில்வே அதிகாரிகளும் சமாளித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 10 ரயில்வே திட்டங்களுக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் தான் நிதி ஒதுக்கீடு என செய்திகள் வெளியாயின. சமூக வலை தளங்களிலும் இந்த தகவல் பரவியது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு திட்டங்கள் ரூ 8,501 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.


திட்டங்கள் ஒதுக்கீடு

காட்பாடி விழுப்புரம் இடையே 160.1 கி.மீ., இரண்டாவது பாதை 1,601 கோடி ரூபாய், சேலம் கரூர் திண்டுக்கல் இடையே 160 கி,மீ., இரண்டாவது பாதை 1,600 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

ஈரோடு கரூர் இடையே 65 கிமீ., இரண்டாவது பாதை 650 கோடி ரூபாய், தர்மாவரம் பாகலா காட்பாடி இடையே 290 கி.மீ., இரண்டாவது பாதை 2,900 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

ஓசூர் ஓமலூர் இடையே 147 கி.மீ இரண்டாவது பாதை 1,470 கோடி ரூபாயில் அமைக்கப்படும்சென்னை கடற்கரை எழும்பூர் இடையே 4.3 கி.மீ. நான்காவது பாதை ரூ 280 கோடியில் என மொத்தம ஆறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
14-பிப்-202016:47:20 IST Report Abuse
Jaya Ram உங்களுக்கு புரியவில்லையா அவர்களின் திட்டம் எல்லாம் வடக்கே உள்ளவர்கள் நேரடியாக தமிழ்நாட்டிற்குவர எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்பதே உங்களுக்கான திட்டங்கள் அல்ல இவைகள் இன்னும் புரியாத மக்களாக இருக்கிறீர்களே. உங்களுக்கான அணைத்து வசதிகளும் எடபடியின் ஆட்சியில் போக்குவதுவசதிகள் ஏற்படுத்தித்தருவார் இன்றைய நிலையில் எனக்கு தெரிந்த வரையில் இப்போதைக்கு எளிமையாகவும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஓரளவிற்கு செயல்படுகிறார் என்பதே உண்மை. இதை விடுத்து அவருடைய ஆட்சியினை கெஜ்ரிவால் போல் ஜெயிக்க வைத்தீர்களானால் உங்கள் வாழ்க்கை பொற்காலமாக அமையும் இல்லையேல் ரஜினி , ஸ்டாலின் , சீமான், விஜய் என்று அலைந்தீர்களானால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு இருண்டகாலம்தான் அமையும்,
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-பிப்-202020:39:27 IST Report Abuse
Sampath Kumar மண்ணாங்கட்டி i அறிவியப்பு என்றால் இதுதான் தமிழக அரசு பிஜேபியின் அடிமை என்பதை இது காட்டுகின்றது
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-பிப்-202016:01:06 IST Report Abuse
Vijay D Ratnam அரியலூரில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டைக்கு ரயில் பாதை அமைத்து ரயிலு உடப்போறாய்ங்களாம். இப்படி சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் 1943ல் எங்க முப்பாட்டனார் எங்க பாட்டனாரிடம் சொன்னாராம். அதையே 1966ல் எங்க பாட்டனார் எங்கப்பாவிடம் சொன்னாராம், 1980ல் எங்கப்பா என்னிடம் சொன்னார், 2005ல் நான் என் மகனிடம் சொன்னேன், சில வருடங்களில் என் மகன் நிச்சயம் என் பேரனிடம் சொல்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. என் பேரன் கொள்ளுபேரனிடம் கூட சொல்லலாம். இன்றைக்கும் தேர்தல் வந்தால் ஒரு பத்து தொகுதிகளில் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டைக்கு ரயில் பாதை அமைத்து உடுவோம் ரயிலு என்று கட்சி வித்தியாசமில்லாமல் அறிக்கை உடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X