கொலை, தற்கொலை, பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : பிப் 10, 2020
Share

விபத்தில் 2 வாலிபர்கள் பலிமரக்காணம்: சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; பிளம்பர். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர், 23. இருவரும்,நேற்று காலை, 6:30 மணிக்கு, சென்னையில் இருந்து, இருசக்கர வாகனத்தில், இ.சி.ஆர்., வழியாக, புதுச்சேரிக்கு சென்றனர்.

மரக்காணம் அடுத்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து, சென்னைக்கு வந்த, 'ஹூண்டாய்' கார், இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இதில் சுரேஷ், அப்துல் காதர் இருவரும் இறந்தனர். விபத்து குறித்து, மரக்காணம் போலீசார் விசாரிக்கின்றனர்.மனைவி கொலையில் கணவர் கைதுதென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காமராஜர்நகரில் வசிப்பவர், வீராசாமி 50; திருநெல்வேலியில், ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி, பாப்பா, 48. இவர்களுக்கு, குழந்தையில்லை.

ஒரு பெண் குழந்தையை, தத்தெடுத்து வளர்க்கின்றனர். வளர்ப்பு மகள், 7ம் வகுப்பு பயில்கிறார்.நேற்று முன்தினம் இரவில், வீட்டில், தம்பதிஇடையே ஏற்பட்ட தகராறில், கத்தியால், மனைவியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில், வீராசாமி குத்தி, கொலை செய்தார். போலீசார், வீராசாமியை கைது செய்தனர்.மனைவியை கொன்றவருக்கு வலைதஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த ஆம்பலாப்பட்டு குடிக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் இளையராஜா, 35. அவரது மனைவி, சங்கீதா, 30; தையல் தொழில் செய்து வருகிறார்.

இருவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இரண்டு மாதங்களுக்கு முன், இளையராஜா, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.இளையராஜா, தன் மனைவி சங்கீதா நடத்தையில் சந்தேகப்பட்டு, நேற்று முன்தினம், வீட்டிற்கு சென்றார். அப்போது, தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், இளையராஜா, கத்தரிக்கோலை எடுத்து, சங்கீதா வயிற்றில் குத்தி, தப்பியோடி விட்டார்.
இதில், சங்கீதா இறந்தார்.பாப்பாநாடு போலீசார், இளையராஜாவை தேடி வருகின்றனர். பாட்டியை கொலை செய்த பேரன்தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள விஸ்வநாதபுரத்தில் வசிப்பவர், மும்தாஜ், 65; முட்டை வியாபாரி. இவரது மகன் வழி பேரன், அப்துல், 32; ஆட்டோ ஓட்டிவந்தார்.மது குடிப்பதற்காக, பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில், பாட்டியை கம்பால் தாக்கினார். இதில் மும்தாஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார். செங்கோட்டை போலீசார், அப்துலை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X