ரூ.4 கோடி, நண்டு மோசடி எஸ்.பி.,யிடம் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.4 கோடி, 'நண்டு' மோசடி எஸ்.பி.,யிடம் புகார்

Added : பிப் 10, 2020
Share
வேலுார் : நண்டு வளர்ப்பில், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக, 486 பேரிடம், 3.80 கோடி ரூபாய் மோசடி செய்தோர் மீது, வேலுார், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. குடியாத்தம், ராஜகோபால் நகரைச் சேர்ந்த சந்திரா உட்பட சிலர், வேலுார், எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று புகார் மனு அளித்தனர்.அதில், கூறப்பட்டு உள்ளதாவது:சில மாதங்களுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டத்தைச்

வேலுார் : நண்டு வளர்ப்பில், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக, 486 பேரிடம், 3.80 கோடி ரூபாய் மோசடி செய்தோர் மீது, வேலுார், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

குடியாத்தம், ராஜகோபால் நகரைச் சேர்ந்த சந்திரா உட்பட சிலர், வேலுார், எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று புகார் மனு அளித்தனர்.அதில், கூறப்பட்டு உள்ளதாவது:சில மாதங்களுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்தியகுமார், 'பேஸ்புக்' வழியாக அறிமுகமானார்.ஆதித்யகுமார் உட்பட மூன்று பேர், நாங்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து, சென்னை வடபழனியில், லட்சுமணன் என்பவர், 'யூனிடாப் குளோபல் ஹோல்டிங்' என்ற நிறுவனம் நடத்தி, நண்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

அவரிடம் பணத்தை முதலீடு செய்தால், அதை இரட்டிப்பாக்கி கொள்ளலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.அதை நம்பி, 486 பேர், குழுவாக சேர்ந்து, அவர்கள் சொன்ன வங்கி கணக்கில், 3.80 கோடி ரூபாய் செலுத்தினோம். இதை பெற்றுக்கொண்ட அவர்கள், பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கவில்லை. சரியான பதிலும் அளிக்கவில்லை. எனவே, எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X