சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரமணி பெயரில் முகநுாலில் ஆபாசம்

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : திராவிட கழக தலைவர் வீரமணி பெயரில், முகநுாலில் ஆபாச விமர்சனங்கள், புகைப்படங்களை பதிவு செய்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்க, போலீஸ் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வடசென்னை மாவட்ட தி.க., இளைஞர் அணி தலைவரும், வழக்கறிஞருமான தளபதி தாக்கல் செய்த மனு:தி.க., தலைவர் வீரமணி, முகநுாலில், 'ஆசிரியர் கே.வீரமணி' என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளார். இந்த ஒரு கணக்கு தவிர, வேறு எதுவும் கிடையாது. முகநுாலில், பல முக்கிய தகவல்களை பதிவு செய்கிறார். சமூக விரோதிகள் சிலர், 'ஆசிரியர் கே.வீரமணி, தமிழர் தலைவர்' என்ற பெயரில் கணக்கு துவங்கி, ஆபாச விமர்சனங்களை பதிவு செய்கின்றனர்.இந்த முகநுால் பக்கத்தை முடக்கவும், ஆபாச விமர்சனங்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரி, மாநகர போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது;

எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, போலி முகநுால் கணக்கை முடக்கவும், புகாரின் மீது வழக்கு பதிவு செய்யவும், உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.குமாரதேவன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, போலீஸ் ஆணையர் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், ௧௯ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X