பொது செய்தி

தமிழ்நாடு

ஒதுங்கிய 200 கிலோ பீடி இலை

Added : பிப் 10, 2020
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் நேற்று 4 மூடைகளில் ஒதுங்கிய 200 கிலோ பீடி இலைகளை மண்டபம் மரைன் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

பிப்.8ல் இலங்கைக்கு கள்ளப்படகில் பீடி இலை மூடைகளை கடத்திய போது பாதுகாப்பு படை கப்பல் ரோந்து வருவதை கண்ட கடத்தல்காரர்கள் மூடைகளை கடலில் வீசி விட்டு தப்பினர். கடலில் மிதந்த மூடைகளை இந்திய காவல் படை வீரர்கள் மீட்டனர். இதன் மீதியே நேற்று ராமேஸ்வரம் கரையில் ஒதுங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் பாம்பன் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா பீடி இலைகளை கடத்தல் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X