அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசுக்கு தினகரன் கோரிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : 'இட ஒதுக்கீட்டிற்கு சேதாரம் வந்துவிடாத அளவிற்கு, தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:அரசு வேலை வாய்ப்புகளிலும், பதவி உயர்விலும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயம் இல்லை என, உச்சநீதிமன்றம் கூறியிருப்பது கவலை அளிக்கிறது. சமூகத்தின் அடித்தட்டில் இருக்கிற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான, சமூக நீதி உரிமையை நிலைநாட்டிட, இட ஒதுக்கீடு தொடர வேண்டியது அவசியம்.எந்தக் காரணத்தாலும், இட ஒதுக்கீட்டுக்கு சேதாரம் வந்து விடாத அளவிற்கு, தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X