சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் மூழ்கியவர் மாயம்

Added : பிப் 10, 2020
Advertisement

மரக்காணம் : கோட்டகுப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடி கடலில் மூழ்கிய இருவரில் ஒருவர் மாயமானார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நிக்கல்ரெட்டி, 22, கல்லுாரி மாணவர். இவரது நண்பர் வம்சி, 25; மற்றும் 9 பேருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். மாலை 6:00 மணிக்கு கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடிகுப்பம் கடலில் நிக்கல்ரெட்டியும், வம்சியும் குளித்தனர். மற்றவர்கள் கரையில் இருந்தனர்.அப்போது, திடீரென நிக்கல்ரெட்டி அலையில் சிக்கினார். அவரை மீட்க முயன்ற வம்சியும் அலையில் சிக்கினர். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மீனவர் உதவியுடன் வம்சியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்குப்பதிந்து நீரில் மூழ்கி காணாமல் போன நிக்கல்ரெட்டியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X