கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் புகை

Added : பிப் 10, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரின் குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் புகையால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள 22 வார்டுகளில் உள்ள குப்பைகள், அந்தந்த வார்டுகளிலிருந்தும் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு குப்பை தொட்டிகளில் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் நகராட்சியின் குப்பை லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி நகராட்சி சுடுகாட்டிற்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.இதுபோன்று ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டவது பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்டது. ஆனால், குப்பைகள் கொட்டுவதற்கு மாற்றிடம் தேர்வு செய்யப்படாததால் ஆண்டுகள் பலவாகியும் அவ்விடத்தில் குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படவில்லை.தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மலை போல் குவிந்து விடுவதால், அடுத்தடுத்து பெருகும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், நகராட்சி ஊழியர்கள், குப்பைகள் அதிகம் சேர்ந்துவிட்டால், அதை அருகில் உள்ள மயான பகுதியில் கொட்டுவதும் தொடர்ந்து அதனை தீ வைத்து கொளுத்துவதுமாக உள்ளனர்.இதனால் குப்பையிலிருந்து வெளியேறும் மாசு கலந்த புகை, அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது. சாலையில் போகிறவர்களின் கண் எரிச்சலை உண்டாக்குவதுடன் விபத்து ஏற்படுகிறது. இது மட்டுமின்றி புகையால் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.தீ வைக்கப்பட்ட குப்பை மேட்டில் பெரிய அளவில் தீப்பிடித்துக்கொள்வதும், புகை மண்டலம் கிளம்பி அவ்வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் தீயணைப்பு வாகனங்கள் வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்துவிட்டு செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. குப்பை மேட்டிற்கு அருகில் தனியார் பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளதால், இந்தப்பகுதி மக்கள் குப்பையிலிருந்து வெளியேறும் புகையால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X