பொது செய்தி

தமிழ்நாடு

கண் பரிசோதனை இலவச முகாம்

Added : பிப் 11, 2020
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் கண் பரிசோதனை இலவச முகாம் நடந்தது.சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் சார்பில் எஸ்.குளத்துார் நடு நிலை பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலர் சுதாகரன் வரவேற்றார்.

முன்னாள் ரோட்டரி தலைவர் வேங்கட நாராயணன், சேதுலட்சுமி வேங்கட நாராயணன், முனுசாமி முகாமை தொடங்கி வைத்து முதல் நோயாளிக்கு அடையாள அட்டை வழங்கினர்.கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர்கள் முகாமில் கலந்து கொண்டு, 150 பேர் கண்களை பரிசோதனை செய்தனர். 115 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்பட்டனர்.முகாமில் தேர்வு தலைவர் ஜோசப் சீனிவாசன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, மதியழகன், ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை ஜெசிந்தா, அருணாசலம், முர்த்தி, வெங்கடேசன், குசேலன், சீனிவாசன், மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் ஆரிப் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X