பொது செய்தி

தமிழ்நாடு

புகை கக்கிச்செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Added : பிப் 11, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகும் சூழல் கள்ளக்குறிச்சியில் தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசாங்க உத்தரவின்படி பிஎஸ்-4 எனும் குறியீடுகளுடன் புகை குறைந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் பழைய வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் வாகனத்தை சாலைகளில் ஓட்ட தடை விதிக்கப்பட்டு அவைகள் அழிக்கப்பட வேண்டும் என்பது அரசு விதிமுறை ஆகும். ஆனால் கட்டுப்பாடுகளின்றி கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் ஓடுகிற ஏராளமான பழைய வாக னங்களில் இருந்து வெளியேறும் புகையினால் தினசரி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வாகனங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்படாமல் உள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் ஓடும் பழைய வாகனங்களை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X