பொது செய்தி

தமிழ்நாடு

காத்திருந்த அதிகாரிகள் ஏமாற்றம்: நடிகர் விஜய் விசாரணைக்கு ஆஜராகவில்லை

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (32)
Advertisement
vijay, actor, enquiry, நடிகர், விஜய், விசாரணை, ஆஜர்,

சென்னை: சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, விசாரணை நடத்த, வினாக்களுடன் தயாராக இருந்த வருமான வரி அதிகாரிகள், நடிகர் விஜய் உட்பட யாரும் வராததால், விசாரணையை தள்ளி வைத்தனர்.

மதுரையை சேர்ந்த, 'பைனான்சியர்' அன்புச்செழியன் மீதான வருமான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை, மதுரையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது. அப்போது, பிகில் பட வசூல் தொடர்பாக, பல்வேறு ஆவணங்கள் சிக்கின.அதன்படி, அப்படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு, அலுவலகம் மற்றும் திரையரங்க அலுவலகங்களில், அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், அன்புச்செழியன், கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருந்த, 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துஆவணங்களையும் கைப்பற்றினர்.மேலும், பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து, நடிகர் விஜய்யிடமும், மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 24 மணி நேரம் நடந்த சோதனையில், விஜய் வீட்டிலிருந்து, ஏராளமான ஆவணங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கல்பாத்தி அகோரம் வீடு, அலுவலகங்களில் இருந்தும், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக, மூன்று நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க, வருமான வரி துறை, 'சம்மன்' அனுப்பியுள்ளது.

அதன்படி, நடிகர் விஜய், அன்புச்செழியன் மற்றும் கல்பாத்தி அகோரம் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், நேற்று ஆஜராவர் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நடிகர் விஜய், மாஸ்டர் படப்பிடிப்பிற்காக, நேற்று காலை, 8:50 மணியளவில், நெய்வேலி சென்று விட்டார். இதேபோல, நேற்று காலை, 11:30 மணியளவில், அன்புச்செழியன் ஆஜராவார் என, தகவல் வெளியானது; அவரும் ஆஜராகவில்லை.

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:நடிகர் விஜய், விசாரணைக்கு ஆஜராவார் என, எதிர்பார்த்தோம். அதற்கேற்ப, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, கேள்விகள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், விஜய் உட்பட மூவரும் ஆஜராகவில்லை; இன்று வருவர் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பரபரப்பு!


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், நடிகர் விஜய் ஆஜராவார் என, நேற்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க, 'டிவி' மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள், காலையிலேயே அங்கு குவிந்ததால், அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
18-பிப்-202011:38:25 IST Report Abuse
Swaminathan Chandramouli சிதம்பரத்தை கைது செய்ய ஒரு அதிகாரி சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று கைது செய்தார் . அது போல விஜய் ஜோசப் வீட்டிலும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று கைது செய்ய வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-பிப்-202016:41:36 IST Report Abuse
Endrum Indian ஏதாவது கேள்வி கேட்டா நான் எக்கு தப்பா ஏதாவது சொல்லிடுவேன் அப்புறம் மாட்டிக்குவேன் என்ற பயத்தில் எனது ஆடிட்டரை அனுப்பி வைக்கின்றேன் - இப்படிக்கு ஜோசப் விஜய் என்று எடுத்துக்கொள்ளலாமா
Rate this:
Share this comment
Cancel
vadivel - coimbatore,இந்தியா
12-பிப்-202015:48:31 IST Report Abuse
vadivel விஜய் மேல தப்பு இல்லைனா தைரியமா எதிர்கொள்ளலாம். தேவை இல்லாம வான் மேல ஏறி செல்லபி எடுக்க வேண்டியது இல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X