பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் பகுதியில் சீட்டு நடத்தி மோசடி ரூ.30 லட்சம் மீட்டுத்தர கலெக்டரிடம் மனு

Added : பிப் 11, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பகுதியில் சீட்டு நடத்தி மோசடி செய்த நிதி நிறுவன நிர்வாகிகளிடமிருந்து 30 லட்சம் ரூபாயை பெற்றுத்தரவேண்டும் என தோட்டப்பாடி கிராம மக்கள் கலெக்டர் கிரண் குராலாவிடம் மனு அளித்தனர்.

மனு விபரம்:ஆத்துார் அடுத்த சின்னதிருப்பதியை தலைமையிடமாக கொண்ட எஸ்.எஸ்.வி., எனும் நிதி நிறுவனத்தில் மாதம் 1000, 500, 200 ரூபாய் என தவணை முறையில் பணம் செலுத்தினர். 60 மாத தவணை கடந்த பின் 50 சதவீத வட்டியும், போனஸ் தொகையும் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் திருப்பித்தரப்படும் எனும் நிபந்தனையை ஏற்று 5 ஆண்டு காலம் 60 பேர் பணத்தைக் கட்டினோம்.ஆனால் 5 ஆண்டுகள் கடந்த பின் பணத்தை தராமல் அலைக்கழித்த நிலையில், பட்டுவாடா செய்வதாக கூறி எங்களுக்கு வழங்கிய உரிய பத்திரத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டு நிதி நிறுவன நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டார்.எனவே, தவணை முறையில் 5 ஆண்டுகள் பணம் செலுத்தி எங்களை ஏமாற்றிய நிதி நிறுவன நிர்வாகிகளிடமிருந்து நாங்கள் செலுத்திய 30 லட்சம் ரூபாயை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X