பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று இடம் வேண்டும் கலெக்டரிடம் மக்கள் மனு

Added : பிப் 11, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : அக்கராயபாளையம் அரசு புறம்போக்கில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு சார்பில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் கிரண்குராலாவிடம் அளித்துள்ள மனு:கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.இவர்கள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு, கதவு எண், வாய்தா ரசீது ஆகியவைகளுடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி ஆக்கிரமிப்புகள் அரசு சார்பில் கடந்த சில ஆண்டுகளாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் மாற்று இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X