நிறுத்தமுடியாத செயற்கைகோள்: ஈரான் ராக்கெட் சோதனையில் தோல்வி

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
டெஹ்ரான், : ஈரான் விண்வெளி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்ட 'ஜாபர்' செயற்கைக் கோள், புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இதையடுத்து, ராக்கெட் சோதனை தோல்வியடைந்ததாக, ஈரான் அரசு அறிவித்தது.மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 2018ம் ஆண்டில், ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில்

டெஹ்ரான், : ஈரான் விண்வெளி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்ட 'ஜாபர்' செயற்கைக் கோள், புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இதையடுத்து, ராக்கெட் சோதனை தோல்வியடைந்ததாக, ஈரான் அரசு அறிவித்தது.



latest tamil news



மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 2018ம் ஆண்டில், ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. கடந்த மாதம், அமெரிக்கா ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ராணுவ படைத் தளபதி குவாசிம் சுலைமானி, கொல்லப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஆண்டு, ஜனவரியில், ஈரான் ஒரு ராக்கெட்டை ஏவியது.

அந்த ராக்கெட்டில் உள்ள தொழில்நுட்பம், கண்டம் விட்டு கண்டம் தாண்டி, தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளிலும் பயன்படுத்தலாம் என்பதால், ஈரானை அமெரிக்கா சாடியது. அதற்கு பதிலளித்த ஈரான், அணு ஆயுதங்களை பயன்படுத்த, தாங்கள் விரும்பவில்லை என்றும், விண்வெளித்துறையில், கால் பதிக்கவே, அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் கூறியது.இந்நிலையில், அதே தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட் ஒன்றை, ஈரான் விண்வெளி மையம், நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது.


latest tamil news



எனினும், அதிலிருந்து பிரிந்த செயற்கைக்கோள், புவி சுற்று வட்டப் பாதையில் நிறுத்தமுடியாமல் போனது. ஈரான் ராணுவ அமைச்சர் கூறியதாவது:'ஜாபர்' என்ற செயற்கைக்கோள், 'சிமோர்க்' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக ஏவப்பட்ட அந்த ராக்கெட், 540 கி.மீ., தொலைவு வரை சென்றது. விண்வெளியில், ஜாபர் செயற்கைக்கோள், ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. எனினும், போதிய வேகம் இல்லாத காரணத்தால், நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில், செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியவில்லை. வரும் காலங்களில், அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து, ராக்கெட்டுகளை விண்ணில் நிலை நிறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, கண்டம் விட்டு கண்டம் தாக்கும், ஏவுகணைகளை ஈரான் மேம்படுத்தப்படுத்தி வருவதாகவும், அதை மறைக்கவே, இதுபோன்ற ராக்கெட் சோதனைகளை, ஈரான் நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
11-பிப்-202022:03:16 IST Report Abuse
dandy காண மயில் (யூதர்கள் ) ஆட கண்டிருந்த வான்கோழி ..தானும் அதுவாக பாவித்தே ..தடடை பூமியில் செயமதி அனுப்பியது ஹி ஹி ஹி
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
11-பிப்-202021:05:53 IST Report Abuse
N.K வாழ்த்துக்கள். மீண்டும் முயற்சி செய்து வெல்லுங்கள். அறிவியலில் கவனம் செலுத்தி நாட்டில் அமைதியை உண்டாக்குங்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
11-பிப்-202006:29:43 IST Report Abuse
blocked user பூமி உருண்டை என்று இவர்கள் உறுதி செய்தால் அது நிச்சயம் ஹரம். சவூதி ஈரான் பின்பற்றும் மார்க்கத்தை தடை செய்யக்கூட வாய்ப்பு இருக்கிறது...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-பிப்-202010:17:09 IST Report Abuse
Malick Rajaஉன்னைப்போன்றோரும் உலகில் அவசியமே .....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
11-பிப்-202015:10:27 IST Report Abuse
dandyஉங்களை போன்றோர் ..இன்னும் 4 ம் நூற்றாண்டு கூவலை இன்னும் நம்புகிண்றீர்கள் ......
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
11-பிப்-202015:44:02 IST Report Abuse
dandyஒடடக மூளை களுக்கு எதாவது சொந்த கண்டுபிடிப்பு உண்டா ? ஹி ஹி ஹி "0"...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
11-பிப்-202016:52:22 IST Report Abuse
dandyஒடடக சவூதி கள் என்றும் பார்சி மொழி பேசும் ஈரானை மதிப்பதில்லை ஹெஹெஹெ ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது எந்த ஒரு அரபு நாடும் ஈரானை ஆதரிக்கவில்லை...
Rate this:
Tamilan - madurai,இந்தியா
11-பிப்-202019:25:56 IST Report Abuse
Tamilanஎன்னா மாலிக்கு நீயே உலகத்துல அவசியமா இருக்கிறப்ப, மத்தவங்க இருக்க கூடாதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X