கிராம மாணவர்களிடம் கஞ்சா விற்பனை ?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம மாணவர்களிடம் கஞ்சா விற்பனை ?

Added : பிப் 11, 2020
Share

காஞ்சிபுரம்:நகர்ப்புறங்களில் கெடுபிடி இருப்பதால், கிராமப்புற மாணவர்களிடம், கஞ்சா விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில், சில ஆண்டுகளாகவே, கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கஞ்சா பரவலை தடுக்க, அதன் விற்பனையாளர்களை, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், விரட்டி பிடித்து வருகின்றனர். மாவட்ட அளவில், 100க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இது ஒருபுறமிருக்க, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் அவலம் நீடித்தபடியே உள்ளது.
கஞ்சா விற்பனை விவகாரத்தில், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவன், கொலை செய்யப்பட்ட சம்பவம், சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை எழுகிறது.
நகர்ப்புறங்களில், போலீசாரின் கெடுபிடி அதிகமானதால், கஞ்சா விற்பனை செய்வோர், கிராமப்புற மாணவர்களிடம், கஞ்சா விற்பனை செய்வதாக தெரிகிறது.மாகரல், ஆறப்பாக்கம் போன்ற கிராமங்களில், பள்ளி மாணவர்களுக்கு, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.சில மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,அனைத்து மாணவர்களும் கஞ்சாவுக்கு அடிமையாகாத வகையில், போலீசார், உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X