பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள்

Added : பிப் 11, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. அதில் மாநில பொதுச் செயலர் பாரி கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்து வைத்தார்.கள்ளக்குறிச்சி துணை பி.டி.ஓ., கொளஞ்சி வேலு மாவட்ட தலைவராகவும், சின்னசேலம் துணை பி.டி.ஓ., சந்திரசேகரன் மாவட்ட செயலராகவும், சங்கராபுரம் உதவியாளர் ரங்கநாதன் மாவட்ட பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன் குமார், ஷபி, செந்தில்முருகன், செல்வ போதகர், வெங்கடேசன் ஆகியோர் தேர்வாகினர். மேலும் மாவட்ட இணைச் செயலர்கள் சரவணன், பழனிவேல் ரமேஷ், வீரபுத்திரன், அரவிந்தன் ஆகியோரும், மாவட்ட தணிக்கையாளர்களாக செல்வராஜ், ஜெகதீசன் ஆகியோரும், மாவட்ட மகளிர் அமைப்பாளர்களாக பார்வதி விஜயலட்சுமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X