பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் மாறியது அரசு பள்ளி: ரூ.18 லட்சத்தில் மேம்பாட்டு பணி

Added : பிப் 11, 2020
Advertisement
 ஒரே நாளில் மாறியது அரசு பள்ளி:  ரூ.18 லட்சத்தில் மேம்பாட்டு பணி

மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கல்வி சூழலுக்கு ஏற்றவாறு, ஒரே நாளில் மேம்படுத்தப்பட்டது.
'ஹேண்ட் இன் ஹேண்ட்' தன்னார்வ நிறுவனம், அதன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், கல்வி கற்றல் சூழலை மேம்படுத்துகிறது.அதன்படி, மாமல்லபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 18 லட்சம் ரூபாய் நிதியுதவியில் இதை செயல்படுத்தியது.நிறுவன தன்னார்வலர்கள், 200க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து, புரஜெக்டர் மற்றும் டிஜிட்டல் திரையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறை, பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்களுடன் நுாலகம் ஏற்படுத்தினர்.வளாகத்தில், மலர் செடிகளுடன், அழகிய தோட்டம் அமைத்தனர். பள்ளி கட்டடங்கள், சுற்றுச்சுவருக்கு, அழகிய ஓவியங்களுடன், வண்ணம் தீட்டி, வாசகங்கள் எழுதினர்.மாணவ - மாணவியருக்கு, கை, கால், பூ, வளைய பந்துகள் வழங்கி, விளையாட்டுப் பயிற்சி அளித்தனர்; கேரம் விளையாடினர்; ஓவியப் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கினர்.கல்வி வளாக சூழல் மேம்பாட்டில், மாணவ - மாணவியரையும் ஈடுபடுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஒரே நாளில், பள்ளிச் சூழல் மேம்பட்டதை, இப்பகுதியினர் கண்டு வியந்தனர். மாவட்ட கல்வி அலுவலர், நாராயணன், தலைமை ஆசிரியை லதா, ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன தலைவர், சந்தீப் முகர்ஜி, ஆசியன் பெயின்ட்ஸ், முதன்மைச் செயல் அலுவலர், குமார் பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேம்பாட்டு பணிகளை, சில நாட்களுக்கு தொடர்ந்து, நிறைவு செய்வர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X