பொது செய்தி

தமிழ்நாடு

மரத்திற்கு நீர் செல்ல வழி இல்லை: விளையாட்டு அரங்க பணியில் அலட்சியம்

Added : பிப் 11, 2020
Advertisement

காஞ்சிபுரம்:மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள மரங்களின் அடிபாகத்தை சுற்றி, சிமென்டால் தளம் அமைத்துள்ளதால், தண்ணீர் செல்ல முடியாமல், மரங்கள் அழியும் ஆபத்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் பழைய கட்டடம், முழுவதும் சேதமடைந்து காணப்பட்டது.அதனால், அரங்கத்தை இடித்து, அதே இடத்தில், 15 கோடி ரூபாய் செலவில், புதிய விளையாட்டு அரங்கம் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது; தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.இந்த புதிய கட்டடத்தில் அலுவலகம், வீரர்கள், வீராங்கனையர் தங்குவது உட்பட, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இந்த அரங்கம் அமைந்துள்ள இடத்தில், கட்டுமான பணிக்காக, ஏற்கனவே இருந்த பெரிய மரங்கள் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது, எஞ்சிய மரங்களும் அழியும் நிலையில் உள்ளன.
அதாவது, அரங்க வளாகத்தில் உள்ள மரத்திற்கு தண்ணீர் ஊற்றவும், மழை நீர் செல்லவும் வழி ஏற்படுத்தாமல், மரத்தை சுற்றி, சிமென்டால் தரை அமைத்துள்ளனர். இதனால், தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், 'புதிய கட்டடம் எப்படி தேவையோ, அதே போல் மரங்களும் கட்டாயம் தேவை. ''அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பணி மேற்கொண்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், இது நடந்துள்ளது,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X