'வாட்ஸ் ஆப் பே'க்கு தடை கோரி மனு

Added : பிப் 11, 2020
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் 'வாட்ஸ்ஆப்' நிறுவனம் சோதனை அடிப்படையில் நடத்தி வரும் பணப் பரிவர்த்தனை சேவையை நிறுத்த உத்தரவிடக் கோரி 'சி.ஏ.எஸ்.சி.' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவைச் சேர்ந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் அலைபேசியில் தகவல் பரிமாற்றச் சேவையை வழங்கி வருகிறது. அத்துடன் 'வாட்ஸ்ஆப் பே' என்ற பிரிவு மூலம் இந்தியாவில் நிதி பரிவர்த்தனை சேவையை சோதனை அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.'இந்தியாவில் நிதிச் சேவையில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்து வாடிக்கையாளர்களின் தகவல்களை இங்குள்ள 'சர்வரில்' சேமிக்க வேண்டும்' என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுஉள்ளது.

இதை மதிக்காமல் சோதனை அடிப்படையில் தான் பணப் பரிவர்த்தனை சேவை மேற்கொள்வதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறுகிறது.இந்நிறுவனத்தின் தகவல் பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அதில் 10 லட்சம் பேர் சோதனை அடிப்படையிலான வாட்ஸ் ஆப் பே மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். அவர்களின் சுய விபரத்தகவல்களை சேமிக்க இங்கு 'செர்வர்' அமைக்கப்படவில்லை.மேலும் வாட்ஸ் அப் சேவையில் குறைகளை தெரிவிக்க இந்தியாவில் அலுவலகமோ அல்லது குறை தீர்ப்பு அதிகாரியோ நியமிக்கப்படவில்லை.

இதை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டிய உடன் குறை தீர்ப்பு அதிகாரியை வாட்ஸ் ஆப் நியமித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அல்ல. அமெரிக்காவில் நியமித்துள்ளது. இதுவும் விதிமீறல்தான்.'வர்த்தக ரீதியில் வாட்ஸ்ஆப் பே அறிமுகமாகும் போது உள்நாட்டில் வாடிக்கையாளர் தகவல்களை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என வாட்ஸ் ஆப் கூறுகிறது.

ஏற்கெனவே ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டு வரும் வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர் தகவல் சேமிப்பு குறித்த உறுதிமொழியை காப்பாற்றுமா என தெரியவில்லை. அதனால் சோதனை அடிப்படையிலான வாட்ஸ் ஆப் பே பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X