பயணிக்கு மிரட்டல்: விமானி 'சஸ்பெண்ட்'

Added : பிப் 11, 2020
Advertisement

புதுடில்லி : பயணியை மிரட்டிய விமானியை இன்டிகோ நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

கடந்த மாதம்14ம் தேதி சுப்ரியா உன்னி நாயர் என்ற பெண் பத்திரிகையாளர் இன்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களுரு சென்றுள்ளார். விமானம் தரையிறங்கியதும் உடன் வந்த 75 வயது தாயாருக்கு சக்கர நாற்காலி கோரி சேவைப் பிரிவிற்கு போன் செய்துள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சக்கர நாற்காலி வரவில்லை.இதையடுத்து சுப்ரியா விமான பணியாளரிடம் 'ஏற்கெனவே டிக்கெட் பதிவு செய்தபோது சக்கர நாற்காலி தேவை' என குறிப்பிட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த பேச்சின் இடையே புகுந்த ஜெயகிருஷ்ணா என்ற விமானி சுப்ரியாவை தகாத வார்த்தைகளால் திட்டி 'சிறையில் தள்ளுவேன்' என மிரட்டியுள்ளார்.இந்த விவகாரத்தை சுப்ரியா சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் இன்டிகோ நிறுவனம் நடத்திய விசாரணையில் ஜெயகிருஷ்ணா மிரட்டல்விடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக இன்டிகோ நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X