சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வகுப்பறை, திடல் இல்லாத பள்ளியில் மாணவர்கள் அவதி

Added : பிப் 11, 2020
Advertisement
 வகுப்பறை, திடல் இல்லாத பள்ளியில் மாணவர்கள் அவதி

திருப்போரூர்:சிறுதாவூர் அரசு பள்ளிக்கு, விளையாட்டு திடல், வகுப்பறை அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்போரூர் அடுத்த, சிறுதாவூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி, ஒரே வளாகத்தில் இயங்குகின்றன. இப்பள்ளிகளில், 400க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் பயில்கின்றனர்.குறுகிய இடத்தில் செயல்படும் இப்பள்ளிகளுக்கு, விளையாட்டு திடல், போதிய வகுப்பறை இல்லை.இதனால், மாணவ - மாணவியர், பள்ளிக்கு வெளியே சாலையில் விளையாடுகின்றனர்; சில வகுப்புகள், பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகின்றன.சில நாட்களுக்கு முன், ஒரு வகுப்பறை கட்டடத்தில், கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.அப்போது, மாணவர்கள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் அச்சப்படுகின்றனர்.இது குறித்து, அதிகாரிகளுக்கு பல மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அவர்கள் புகார் கூறுகின்றனர்.இப்பள்ளிக்கு, விசாலமான இட வசதியுடன் விளையாட்டு திடல், போதிய வகுப்பறைகள் அமைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X