தமிழ்நாடு

குமுறல் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் கடன் வலையில் வீழ்வதால் கவலை

Added : பிப் 11, 2020
Advertisement


வேடசந்துார், கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கடன் வழங்கி வருவோரால் பெற்றோர் மனம் உளைச்சல் அடைந்துள்ளதாக குமுறல் எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இங்கு பலஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கல்லுாரி படிப்பை முடிப்பது பலருக்கும் கட்டாயம் என்பதால், நிதி நெருக்கடியிலும் அவர்கள் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தனியார் நிதி நிறுவனம் ஒன்று வேடசந்துார் பகுதியில் கல்லுாரி மாணவர்களை மட்டுமே குறிவைத்து கடன் வழங்கி வருகிறது. இது ஒரு வகையில், மாணவர்களுக்கு உதவியாக இருந்தாலும், இதை பயன்படுத்தி வசதியுள்ள மாணவர்களும் பெற்றோருக்கு தெரியாமல் தேவையே இன்றி கடன் பெற்று செலவு செய்கின்றனர். ஒரு மாணவனின் போக்கில் சந்தேகமடைந்த வேடசந்துார் பெற்றோர் ஒருவர் விசாரித்த பின்புதான், இந்த கடன் விபரம் வெளியே தெரியவந்தது.பெயர் வெளியிட விரும்பாத அந்த பெற்றோர் கூறியதாவது: மாணவர்களுக்கு கடன் வழங்கும் அந்நிறுவனம் முதலாண்டு என்றால் முதலில் ரூ.ஆயிரம் கடன் தருவராம். அவர்களிடம் ஆதார், பான் கார்டு நகல்களை வழங்க வேண்டும். கடனை முறையாக செலுத்தினால், மீண்டும் கூடுதல் தொகை வழங்குவராம். கல்லுாரி மாணவர்களை மட்டுமே குறிவைத்து கடன் வழங்குவதால் பெற்றோரும், மாணவர்களும் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X