விவசாயிகள் சீரமைத்த தடுப்பணை

Added : பிப் 11, 2020
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானல் மன்னவனுாரில் பாசன தடுப்பணையை விவசாயிகள் ஒன்றிணைந்து சீரமைத்தனர்.மன்னவனுார் வயல் விவசாய பாசனத்திற்கு கொடியேத்தனாறு பயன்படுகிறது. பரப்பாறு பகுதியில் இருந்து வரும் தண்ணீர், சூழல் சுற்றுலாமையம் வழியாக பாசன பரப்புக்கு செல்கிறது. இதற்கு மத்தியில் மண் மூலம் 10 அடி உயர தடுப்பணையை விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு முன் அமைத்து பராமரித்து வருகின்றனர்.வருவாய் தரிசு நிலத்திலுள்ள தடுப்பணையை நிரந்தரமாக சீரமைக்க தோட்டக்கலைத் துறை வேளாண் பொறியியல் துறையை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதன் மூலம் மேல்களம், ரெட்டவஞ்சி வயல் உட்பட 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அரசு உதவ முன்வராத நிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து தடுப்பணையை பலப்படுத்தினர். உடம்பகுளம், சந்தனப்பாறை வாய்க்கால்கள் பயனற்றுள்ள சூழலில், கொடியேத்தனாறு முக்கிய நீர்பாசனமாக உள்ளது. கனமழை மற்றும் இயற்கை சீற்றங்களால் அடிக்கடி சேதமடையும் தடுப்பணையை கான்கிரீட் துணையுடன் பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X