ஆசிரியயைத் தாக்கிய 2 பெண்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியயைத் தாக்கிய 2 பெண்கள் கைது

Added : பிப் 11, 2020
Share
சின்னசேலம் : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையை தாக்கிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அடுத்த கீழ்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி காந்திமதி, 42; சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் மேலுார் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவரும் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இவர்

சின்னசேலம் : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையை தாக்கிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அடுத்த கீழ்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி காந்திமதி, 42; சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் மேலுார் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவரும் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இவர் சரியாக பாடம் எடுக்காததால் சந்தியாவை பள்ளி நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது. பணியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு காந்திமதிதான் காரணம் என நினைத்த சந்தியா, கடந்த 3ம் தேதி, தனது உறவினர்கள் மேலுாரைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி செல்வி, 40; பொற்கைபாண்டியன் மகள் வெள்ளி, 22; ஆகியோருடன் சேர்ந்து காந்திமதியை திட்டி, தாக்கினார்.இதில் படுகாயமடைந்த காந்திமதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில், சந்தியா உட்பட 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வி, வெள்ளி, ஆகிய இருவரையும் கைது செய்தனர். சந்தியாவை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X