எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்டில் உணவு மானியம் ரூ 7000 கோடி கிடைக்குமா!

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
Budget, பட்ஜெட், தமிழக_அரசு, உணவு, மானியம், 7000 கோடி_நிதி

ரேஷனில் வழங்கப்படும், மானிய விலை உணவு பொருட்களுக்காக, பட்ஜெட்டில், 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசை, உணவுத்துறை வலியுறுத்தி உள்ளது.


குறைந்த விலை


தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.அரிசி, கோதுமையை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து குறைந்த விலையிலும், மற்ற பொருட்களை, தனியாரிடம் இருந்து சந்தை விலைக்கும், நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.

இதற்காக, தமிழக அரசு, பட்ஜெட்டில் ஆண்டுதோறும், 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, ரேஷனில், இலவச அரிசி வழங்கப்படாமல் இருந்தது.அவர்களும் இலவச அரிசி வாங்கி கொள்ளும் வகையில், 5 லட்சம் சர்க்கரை கார்டுகள், சமீபத்தில், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டன. புதிய ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதுபோன்ற காரணங்களால், ரேஷன் பொருட்களுக்கான செலவு அதிகரித்துள்ளது.


வலியுறுத்தல்



எனவே, விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள, தமிழக அரசின் பட்ஜெட்டில், உணவு மானியத்திற்கு, 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு, அரசை உணவுத்துறை வலியுறுத்த உள்ளது. உணவுத்துறையின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உணவு மானியமாக, 6,500 கோடி ரூபாய்ஒதுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-202012:15:13 IST Report Abuse
Vittaalanand ஆண்டு 1996. நான் வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தேன். எனவே அரசுக்கு செலவு வைககவேண்டாம என்கிற நல்லெண்ணத்தில் வந்திடும் வேண்டாம் என்று எழுதி கொடுத்து ரேஷன் அட்டையும் பெற்றுக்கொண்டேன். பின்பு மறுமுறை ரேஷன் அட்டை புதுப்பிக்கொள்ள சென்ற பொழுது சர்க்கரை மட்டும் வேண்டும் என குறிப்பிட்டு என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் போது விNயோகம் செய்வார்கள் என்று சொல்லப்பட்டதால் ஸ்மார்ட் கார்டு விண்ணப்பித்து பெட்ராஸில் அதுவும் எனக்கு எந்தப்பொருஉலும் கிடைக்காது என்றே குறிப்பிடப்பட்டது .. கேவலம் அனைத்து கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு உண்டு என அறிவித்ததால் இணைக்கப்பட்ட கடாயில் வரிசையில் நின்றேன். ஆனால் யென் கார்டுக்கு ஒன்றும் கிடைக்காது என்று சொன்னர்கள். பொருளீட்டும் நிலையில் இருந்த பொழுது வேண்டாம் என சொன்னதற்கு இன்று வயதான2 காலத்தில் சர்க்கரை கூட பெறமுடியதவனாக ஆக்கப்பட்டிருக்கிறேன். அரசுப்பார்வையில் நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன் வயது 77.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X