தமிழ்நாடு

திறப்பு விழாவோடு மூடுவிழா கண்ட பூங்கா: சிறுவர்கள் ஏமாற்றம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement
திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் ரூ.34.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழாவுக்குப்பின், செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.34.55 லட்சம் செலவில் எல்.ஜி.பி., காம்பவுண்ட் பகுதியில் ஊஞ்சல், சறுக்கு, நீர்வீழ்ச்சிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது. 2019 நவம்பரில் பூங்காவின்

திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் ரூ.34.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழாவுக்குப்பின், செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.34.55 லட்சம் செலவில் எல்.ஜி.பி., காம்பவுண்ட் பகுதியில் ஊஞ்சல், சறுக்கு, நீர்வீழ்ச்சிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது. 2019 நவம்பரில் பூங்காவின் திறப்புவிழா நடந்தது. அத்துடன் சரி.அதன்பின் பூங்கா செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பயன்பாடு இல்லாததால் பூங்கா வளாகத்தில் குப்பை குவிந்துள்ளன.விளையாட்டுச் சாதனங்களும் பாழாகி வருகின்றன. பராமரிப்பின்றி செடி, கொடி, மரங்கள் வாடி வருகின்றன. இப்பகுதியில் பொழுது போக்க வழியில்லாததால், பூங்காவை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.மேலும் ரவுண்ட் ரோடு வ.உ.சி., காலனியிலும் ரூ.31.55 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால், இங்கு ஆழ்குழாய் அமைத்துத்தர வேண்டும். மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X