பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 448 மனுக்கள்

Added : பிப் 11, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 448 மனுக்கள் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, கல்வி கடன், வீட்டுமனைப்ப பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகள், ஜாதி சான்றிதழ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 449 மனுக்கள் பெறப்பட்டது.அனைத்து மனுக்களும் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சங்கீதா, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் பிரகாஷ்வேல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பொது உதவியாளர் உஷாராணி, சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் பாலசுப்ர மணியன் மற்றும் தாசில்தார்கள் ரகோத்தமன், கமலம், பாண்டி, பாண்டிய ராஜன், விஜயபிரபாகரன், வளர்மதி உட்பட அனைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X