பொது செய்தி

தமிழ்நாடு

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு

Added : பிப் 11, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி துப்புரவு பணியாளர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மனு அளிக்க வந்தனர். அப்போது உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன், 45; என்பவர் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.உடன் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.இதனையடுத்து தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் காந்தி, செயலர் முருகேசன், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் கிரண் குராலாவிடம் மனுக்களை அளித்தனர்.இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. அத்துடன் தற்கொலைக்கு முயன்ற துப்புரவு பணியாளர் மணிமாறனை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X