சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு நிதி

Added : பிப் 11, 2020
Share
Advertisement

மதுரை : மணல் கடத்தல் வழக்கில் 2 பேருக்கு முன்ஜாமின் அனுமதித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவர்கள் மதுரை அரசு சிறார் கூர்நோக்கு இல்ல வங்கி கணக்கில் 15 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.

திருமங்கலம் அருகே பாப்பான்குளம் கண்மாயில் சட்டவிரோதமாக இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளியதாக சிலர் மீது திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில் லாரி டிரைவர்கள் மதுரை மேலக்கால் செந்தில், திண்டுக்கல் தர்மத்துப்பட்டி கார்த்திக் முன்ஜாமின் அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: மனுதாரர்களுக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தலைமையிலான குழு மதுரை காமராஜர் சாலையில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்தது. அதை முறையாக பராமரிக்காமல் கழிப்பறைகள் மோசமாக இருந்தது தெரியவந்தது. அதன் கண்காணிப்பாளரை குற்றம் சொல்லவில்லை. அங்கு 52 ஆண்கள் மற்றும் 1 பெண் கைதிகள் உள்ளனர்.அங்கு துப்புரவு பணியாளர் பணியிடம் அனுமதிக்கப்படவில்லை. 'அவுட் சோர்சிங்' முறையில் 2 துப்புரவு பணியாளர்களை நியமித்தால் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.

மனுதாரர்கள் தலா 7500 ரூபாயை கூர்நோக்கு இல்ல வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதுபோன்ற ஏற்பாடு மூலம் 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாக நிதியை உயர்த்த முடியும். அதிலிருந்து வரும் வட்டியிலிருந்து 2 துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும். தமிழக அரசு 2 துப்புரவு பணியாளர்களை நியமிக்கும் என இந்நீதிமன்றம் நம்புகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X