தமிழ்நாடு

'போக்சோ' சட்டத்தில் மேலும் இருவரை சேர்க்க வலியுறுத்தல்

Added : பிப் 11, 2020
Advertisement

திண்டுக்கல் :வேடசந்துாரில் பாலியல் வழக்கில் கைதான உமாசேகர், அவரது மகன் மீது, போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சிறுமியின் பெற்றோர் எஸ்.பி., சக்திவேலிடம் மனு அளித்துள்ளனர்.வேடசந்துார் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த மில்தொழிலாளி நாகேந்திரனின் மகள் சஞ்சனா 6, கடந்த பிப்.,2ல் டிராக்டரில் இருந்து விழுந்து இறந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் மறியல் செய்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இதுதொடர்பாக 16,14 வயதுள்ள 2 பேரை போக்சோ சட்டத்திலும், டிராக்டர் உரிமையாளர் உமாசேகரை மோட்டார் வாகன சட்டத்திலும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமியின் தந்தை நாகேந்திரன் திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேலிடம் புகார் அளித்தனர். மனுவில், ''சிறுமி பாலியல் பலாத்காரத்தில் டிராக்டர் உரிமையாளர் உமாசங்கர், அவரது மகன் தருண்குமார் மீது சந்தேகம் உள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். உண்மையெனில் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X