தமிழ்நாடு

சுற்றுச்சூழலை மேம்படுத்த மரங்கள் வளர்ப்போம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

''சுற்றுச்சூழல் மேம்படுவதற்கு குடியிருப்புகளை சுற்றிலும் இயற்கை சார்ந்த மரங்களை வளர்ப்பதற்கு மக்கள் முன்வர வேண்டும்'', என, சின்னமனுார் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நீதிமன்னன் தெரிவித்தார்.காற்று மாசுபடுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கைகளை மக்கள் தவிர்க்காததால் உலக வெப்பமயமாதல் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதன் தாக்கத்தால் பெரும் மழைப்பொழிவு ஒருபுறம், வறட்சி மறுபுறம் என இயற்கை சமநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன பெருக்கத்தில் ஏற்படும் காற்று மாசு காரணமாக பெருநகரங்களில் வசிப்பவர்கள் சுவாச பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர். வளர்ச்சிப்பணிகள் என இயற்கை சார்ந்த மரங்களை வெட்டியதால், சிறு நகரங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமான மழைப்பொழிவு குறைந்து, குடிநீருக்கும் சிக்கல் ஏற்படுகிறது. ஒட்ட சுரண்டப்படும் கனிம வளங்களால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. இயற்கை சமநிலையை மீட்டெடுப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும் சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்த சந்ததியினருக்கு சுகாதாரமான குடிநீர், துாய்மையான காற்று கிடைக்கும். முன்னுதாரணமாக சின்னமனுாரில் இதனை செய்ய வேண்டியது அவசியம்.நீதிமன்னன், மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை,சின்னமனுார்: சின்னமனுார் அரசு மருத்துவமனையில் சுகாதாரமான சூழல் நிலவுவதற்காக, ஏராளமான மரங்கள் வளர்க்கப்படுகின்றன. பின்புறமுள்ள காலியிடத்தில் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து அதிக ஆக்சிஜன் வெளியிடும் மரங்களை வளர்க்க முடிவு செய்துள்ளோம். மன அமைதி ஏற்படுத்தும் இதமான சூழல், துாய்மையான காற்றால் நோயாளிகள் விரைவான நிவாரணம் பெற்று திரும்புகின்றனர். மருத்துவகுணம் கொண்ட வேம்பு, அதிக ஆக்சிஜன் வெளியிடும் மரங்களை சின்னமனுாரில் குடியிருப்புகளுக்கு அருகில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் மேம்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X