பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 11, 2020
Advertisement

விழுப்புரம் : மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், மூன்று நாட்கள் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இம்முகாமில், கடந்த 2019 ஜனவரி முதல் 2020 ஜனவரி மாதம் வரை 334 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 3,706 பணியாளர்களை தேர்வு செய்தனர்.

அதன்படி, இம்மாதத்திற்கான முகாம்கள் வரும் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை நடைபெறவுள்ளது.இதில், மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X