பொது செய்தி

தமிழ்நாடு

கம்பு சாகுபடியில் ஆர்வம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பகுதியில் சிறுதானியத்தில் கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆண்டிபட்டி பகுதியில் மேக்கிழார்பட்டி, அனுப்பபட்டி, சித்தயகவுண்டன்பட்டி, ஏத்தக்கோவில் உட்பட சில கிராமங்களில் சிறுதானிய சாகுபடி நடந்து வருகிறது. நிலத்தடிநீரை நம்பி இறவை பாசன நிலங்களில் இரண்டு மாதத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட கம்பு பயிர்கள் தற்போது பால் பிடிக்கும் நிலையில் கதிர்கள் வளர்ந்துள்ளன.விவசாயிகள் கூறியதாவது:கம்பு பயிருக்கு அதிக நீர் தேவையில்லை. விதைப்பு செய்த மூன்று மாதத்தில் அறுவடை செய்து விடலாம். கோடைகாலத்தில் கம்பு தானியத்தின் தேவை அதிகம் இருக்கும். கால்நடை தீவனத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அறுவடைக்குப்பின் கிடைக்கும் தட்டைகளும் கால்நடைகளுக்கு தீவனமாகி விடும். இதனால் இதனை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X