இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Added : பிப் 11, 2020
Share

விழுப்புரம் : இரண்டாம் நிலை காவலர் தேர்வில், தேர்வான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை சரிபார்ப்பு பணி நடந்தது.

தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால், 8,826 பணியிடங்களுக்கு இரண்டாம் நிலை காவலர்களுக்கான கடந்த ஆகஸ்ட் மாதம் எழுத்து தேர்வு நடந்து, செப்டம்பர் மாதம் முடிவுகள் வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உடல் தகுதி மற்றும் திறன் தேர்வுகள் நடந்தது.இத்தேர்வுகளில், தேர்வான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை பதிவு நடந்தது. விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த பணிக்கு, எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.இதில் மாவட்டத்தைச் சேர்ந்த 572 ஆண்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை பதிவு செய்தனர்.மேலும், இன்று பெண்களுக்கு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X