பொது செய்தி

தமிழ்நாடு

இறந்த தாயின் நினைவாக குளத்தை சீரமைக்கும் மகன்..

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement
குளம், சீரமைப்பு, இறந்த_தாய், நினைவு, தூர்வாறிய, பயன்பாடு

உத்திரமேரூர்: இறந்த தன் தாயின் நினைவாக, உத்திரமேரூர் அருகே, விவசாயி ஒருவர், சொந்த செலவில், அப்பகுதி பொதுக்குளத்தை சீரமைத்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் குறும்பிரை கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாலை மகன் கருணாகரன், 52; விவசாயி.ஜனவரி, 29ம் தேதி, வயது மூப்பு காரணமாக, அஞ்சாலை உயிர் இழந்தார். அவருக்கு, 16ம் நாள் நினைவஞ்சலி, வரும், 13ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில், கருணாகரன், தன் தாயின் நினைவாக, அப்பகுதியில் துார்ந்த, 3 ஏக்கர் பரப்பு பொதுக்குளத்தை, துார் வாரி சீரமைக்க தீர்மானித்தார். அதன்படி, நேற்று காலை, சீரமைக்கப்படும் குளத்தில், தன் தாயின் படத்தை வைத்து, குடும்பத்துடன், அஞ்சலி செலுத்தினார்.பின், இரு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம், குளம் சீரமைப்பு பணியை துவக்கி, மேற் கொண்டு வருகிறார்.இது குறித்து, கருணாகரன் கூறியதாவது: பொது நலன் சார்ந்த விஷயங்களில், என் தாய் அக்கறை கொண்டவராக இருந்தார்.

அதன் காரணமாக, நானும், சமூக நலன் சார்ந்த செயல் பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன். அவர் இறப்பால், அவரது நினைவாக, சமூக நலன் சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என,தோன்றியது.

அதன் அடிப்படையில், பல ஆண்டுகளாக, மக்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்துள்ள ஊர் பொதுக்குளத்தை, துார் வாரி சீரமைக்க தீர்மானித்தேன்.தற்போது, பணியை துவக்கி உள்ளேன். இது, மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும்.இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
11-பிப்-202020:16:28 IST Report Abuse
Subramanian வாழ்க
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-202015:01:35 IST Report Abuse
Sathyanarayanan well.keepit up.OmShanthi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X