பாலியல் தொல்லை: மாணவியர் போராட்டம்

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : டில்லி கார்கி கல்லூரிக்குள், மர்ம நபர்கள், மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், வழக்குப்பதிவு செய்த டில்லி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.

டில்லியில் உள்ள கார்கி பெண்கள் கல்லூரியில், பிப்ரவரி, 6ம் தேதி, கலை விழா நடந்தது. அப்போது, கல்லூரிக்குள் நுழைந்த சில மர்ம நபர்கள், மாணவியரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.இதுகுறித்து சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராமில்' ஒரு மாணவி வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:கல்லூரியில் கலை விழா நடந்தபோது, போலீசாரும், அதிரடி படையினரும் கல்லூரி வாசலில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அப்போது, சுமார், 30 வயது நிரம்பிய ஆண்கள் பலர், கல்லூரிக்குள் நுழைந்தனர். சுவரில் ஏறி குதித்தும் சிலர் உள்ளே நுழைந்தனர். குடிபோதையில் வந்த அவர்களை, யாரும் தடுத்து நிறுத்தவில்லை.கல்லூரிக்குள் நுழைந்த அவர்கள், மாணவியருக்கு பாலியல் தொல்லை தந்தனர். மூர்க்கத்தனமாக நடந்துகொண்டனர். அச்சத்தில் மாணவியர் பலர், அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தின்போது, யாரும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அது தொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், கார்கி கல்லூரி வாசலில், 100க்கும் மேற்பட்ட மாணவியர், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு சென்ற, டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், கல்லூரி நிர்வாகத்திற்கும், டில்லி காவல்துறைக்கும், 'நோட்டீஸ்' அனுப்பினார். கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையை தொடங்கிய போலீசார், கல்லூரி வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:கார்கி கல்லூரியில் உள்ள நம் மகள்களிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம், மிகவும் துரதிஷ்டவசமானது. அதை, ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். கல்லூரிகளில் பயிலும் நம் குழந்தைகள், பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதிபடுத்தவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
11-பிப்-202009:43:03 IST Report Abuse
Vijaya Raghav sariyaa பாருங்க பெண்கள் கல்லூரிக்குள் புகுந்த இவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X