பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.1.24 கோடி வர்த்தகம்

Added : பிப் 11, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்காச்சோளம் மற்றும் உளுந்து அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்படுகிறது. இதனையொட்டி, கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து, மக்காச்சோள மூட்டைகள் வரத்து அதிகரித்தது.மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று உளுந்து 1,600 மூட்டை, மக்காச்சோளம் 1000, கம்பு 50, கேழ்வரகு 30, பச்சைப் பயறு 12, வேர்க்கடலை 10, எள், துரை, ஆமணக்கு தலா 2 மூட்டைகள், ராகி ஒரு மூட்டை என 2,922 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்கு வந்தன.இதில், ஒரு மூட்டை உளுந்து 6,331 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 1,623, கம்பு 2,230, கேழ்வரகு 1,768, பச்சைப் பயறு 5,982, வேர்க்கடலை 5,585 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.கமிட்டிக்கு 678 விவசாயிகள் கொண்டு வந்த 2,922 மூட்டை விளை பொருட்கள் மொத்தம் 1 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 162 ரூபாய்க்கு என மொத்தம் ஒரு கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 162 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X