மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருடுவது அதிகரிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

கூடலூர்:முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில் விவசாயத்திற்காக முறைகேடாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருடுவது அதிகரித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் இருந்து கூடலூர், கம்பம், சின்னமனூர், வீரபாண்டி வழியாக முல்லைப்பெரியாற்றில் சென்று வைகை அணையில் கலக்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்ததால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் லோயர்கேம்ப், கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட முல்லைப்பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் சிலரால் முறைகேடாக மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.கடந்த ஆண்டு இவ்வாறு தண்ணீர் திருட பயன்படுத்தப்பட்ட மோட்டாரை பறிமுதல் செய்ததுடன் சம்பந்தப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்து பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மீண்டும் இச்செயல் தொடர்கிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் அடுத்தடுத்த பகுதிகளுக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், ஆற்றில் தண்ணீர் திருட்டை முழுமையாக தடுக்க பொதுப்பணித்துறையினர் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X