ஒப்பந்த தொழிலாளர்கள் பி.எப்., நிதியில் முறைகேடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த தொழிலாளர்கள் பி.எப்., நிதியில் முறைகேடு

Added : பிப் 11, 2020
Share

தேனி :ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, காப்பீடுகளை முறையாக செலுத்த தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மானி உத்தரவிட்டார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மானி தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ், சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., முன்னிலை வகித்தனர்.பி.எப். பணம் முறைகேடு: ஜெகநாதன், மாநில துணைச் செயலாளர் , இந்திய குடியரசுதொழிலாளர் சங்கம்: துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி செய்வதற்கான உபகரணங்கள், பாதுகாப்பு உறைகள், சீருடைகள் முறையாக வழங்குவது இல்லை. ஒப்பந்த பணி தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பி.எப். இ.எஸ்.ஐ.க்கு உரிய தொகையினை முறையாக செலுத்துவது இல்லை. முறைகேடு நடக்கிறது. குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது.ஜெயப்பாண்டி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர்: தற்காலிக பணியாளர்களுக்கு அரசு ரூ.590 ஊதியம் வழங்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நடைமுறைப்படுத்த வில்லை. சின்னமனுார் நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க கலெக்டர் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.ஆணைய உறுப்பினர் : ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி எவ்வளவு, அதில் பி.எப். தொகை பிடித்தம் செய்கிறீர்கள். 15 ஆண்டு துப்புரவு பணி செய்த தொழிலாளிக்கு பி.எப்.யில் ரூ.30 ஆயிரம் மட்டுமே உள்ளது. சின்னமனுார் நகராட்சியில் ஏன் ஊதியம் உயர்த்தி வழங்க வில்லை.நாகராஜன், தேனி கமிஷனர்: தொழிலாளிக்கு ரூ.410 சம்பளத்தில் பிடித்தம் போக ரூ.360 சம்பளம் வழங்கப்படுகிறது. பி.எப். முறையாக ஒரு ஆண்டாக செலுத்தப்படுகிறது.சின்னமனுாார் நகராட்சியில் 2019 ஏப்ரல் முதல் நிலுவையில் தொகை வழங்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர் தெரிவித்தார்.ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர்: 60 நிரந்த பணியாளர்கள், 174 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். தொழிலாளர் குடியிருப்பு இல்லை. இடம் தேடுகிறோம்.வளாகத்திற்கு இடம் எப்படி கிடைக்கிறது:ஆணைய உறுப்பினர்: வணிக வளாகத்திற்கு மட்டும் இடம் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கு வீடு கட்ட இடம் கிடைக்காதா. முதலில் அவர்களுக்கு வீடு வசதி செய்யுங்கள். ஓய்வு பெற்ற பின் எங்கு குடியிருப்பார்கள். நிரந்த வீடு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யார்,யாருக்கு சொந்தவீடு இல்லை என்ற பட்டியல் தயார் செய்து வழங்குங்கள், துப்பரவு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். .ஜெகநாதன்: பிற சமூகத்தினர் துப்புரவு பணிக்கு சேர்ந்து டிரைவராகவும், அலுவலக உதவியாளராக வேலை செய்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் சீனியாரிட்டி பாதிக்கப்படுகிறது.ஆணைய உறுப்பினர்: பிற சமூகத்தினர் துப்புரவு பணிக்கு சேர்ந்தால் அந்த பணி அவசியம் செய்ய வேண்டும். இதுபோன்ற முறைகேடு செய்து, டிரைவர், உதவியாளர் பணி செய்வோர் மீது புகார் கொடுங்கள். குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தாட்கோ மூலம் எத்தனை பேருக்கு தொழில் கடன் வழங்கியுள்ளீர்கள். எவ்வளவு விண்ணப்பம் வந்துள்ளது.சுப்பிரமணி, நலக்குழு உறுப்பினர்: துப்புரவு பணியாளர்கள் கந்து வட்டிகாரர்களிடம் கடன் பெற்று சிரமம் அடைகின்றனர். அவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.முத்தையன் ஆர்.டி.ஓ: தாட்கோவில் 2010 முதல் கடன் கேட்டு 16 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிதி ஒதுக்கீடு வரவில்லை.ஆணைய உறுப்பினர்: இவர்களுக்கு கடன் வழங்க மத்திய அரசு ரூ.40 கோடி விரைவில் ஒதுக்க உள்ளதுகாலில் விழுந்து வணங்கினார்:முன்னதாக தேனி நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுடன் ஆணைய உறுப்பினர் ஆலோசனை நடத்தினர். சிறந்த தொழிலாளிக்கு விருது வழங்கி கவுரவித்தார். அப்போது பெண் துப்புரவு பணியாளர் சுப்புலட்சுமிக்கு, மாலை அணிவித்து சால்வை போர்த்தி காலில் விழுந்து வணங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X