தமிழ்நாடு

வாழ்ந்து காட்டுவோம் சுழல் நிதியில் மோசடி: பழங்குடியின பெண்கள் கலெக்டரிடம் புகார்

Added : பிப் 11, 2020
Advertisement

தேனி :ஆதிவாசி பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை திருப்பி வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் புகார் தெரிவித்தனர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி மனுக்களை பெற்றார். பல்வேறு கிராமங்களில் இருந்த வந்த பெண்கள் ,இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்தனர்.பொதுமக்கள் வழங்கிய மனுக்கள்: போடி முந்தல் வனக்கிராமம், வீரலட்சுமி ஆதிவாசி மகளிர் குழு சார்பில் ஈஸ்வரி தலைமையில் பெண்கள் வழங்கிய மனுவில், ' வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 2008-2009 ல் பளியர் ஆதிவாசி பெண்களை ஒருங்கிணைந்து, அல்லிநகரம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மூலம் ரூ.50 ஆயிரம் சுழல்நிதியாக கடன்பெற்றோம். மாத,மாதம் திட்ட பணியாளர்கள் சிலர் மூலம் கடனைதொையை திருப்பி செலுத்தினோம். ஆனால் ரசீது ஏதும் கொடுக்காமல் பின்னர் தருவதாக கூறினர். தற்போது லோக் அதாலத் மூலம் வட்டியுடன் ரூ.71 ஆயிரம் கடன் திரும்ப செலுத்த நோட்டீஸ் வந்துள்ளது. அதை பார்த்து நாங்கள் ஏமாற்றப்பட்டதை தெரிந்தோம். கலெக்டர் விசாரணை நடத்தி கல்வியறிவு இல்லாத எங்களை இப் பிரச்னையில் இருந்து விடுவிக்க வேண்டும் '' என கோரியுள்ளனர்.* போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி மேலப்புரவு பழங்குடியின பெண்கள் கருப்பாயி தலைமையில் பெண்கள் வழங்கிய மனுவில்,'' கிராமத்தில் 25 தொகுப்பு வீடுகளில் 20 ஆண்டுகளாக வசிக்கிறோம். இதுவரை இலவச மின்சாரம் பயன்படுத்தி வந்தோம். தற்போது ஒரு வீட்டிற்கு ரூ.2,830 செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர். ஏழ்மையில் உள்ள எங்களுக்கு மின் கட்டணம் ரத்து செய்திட வேண்டும்'' என கோரியுள்ளனர்.* கம்பம் நகர புதிய தமிழகம் கட்சி நகர தலைவர் தெய்வேந்திர கண்ணன் தலைமையில் 100 பெண்கள் வழங்கிய மனுவில், கம்பம் நகராட்சி 17 வயது வார்டில் 450 குடும்பத்தினர் கூலி தொழிலாளர்களாக வாடகை வீட்டில் வசிக்கின்றோம். சொந்த வீடு இன்றி சிரமம் அடைகின்றோம். எனவே, உத்தமபாளையத்தில் உள்ள இலவச அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.*பழங்குடி கூட்டமைப்பு தலைவர் கருப்பையா, லட்சுமி, வார்டு உறுப்பினர் முனியம்மாள் தலைமையில் நுாறு பெண்கள் அளித்த மனு:பெரியகுளம் தாலுகா செல்லாங்குடி, சொக்கன்அலை, கறும்பாறை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் வங்கியில் கடன் பெற்று தருவதாக பெரியகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆதார் கார்டுகளை பெற்றார். 60 பேரிடம் தலா ரூ.36 ஆயிரம் கடன் பெற்றது போல் கையெழுத்து வாங்கினார். பழங்குடியின பெண்களுக்கு தலா ரூ. ஆயிரம் மட்டுமே வழங்கினர். சில மாதங்களுக்கு பின் வங்கியில் இருந்து கடன் தொகை செலுத்த வேண்டும் என கடிதம் வந்தது. எனவே பெண் உள்ளிட்ட மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X