பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி

Added : பிப் 11, 2020
Advertisement

தேனி :அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கடந்த செப்., முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. அதில்வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பரில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 9,10ம் தேதிகளில் ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடந்தது.இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் பணி வாய்ப்பு பெற்றனர். தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள தமிழ், ஆங்கிலம், பொருளியல் பாட ஆசிரியர்கள் 5 பேர் நிரப்பப்பட்டனர். கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை. கலந்தாய்வில் தேர்வு செய்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி வழங்கினார். இவர்கள் நாளை பணியேற்க உள்ளனர். கலந்தாய்வு ஏற்பாடுகளை அலுவலக கண்காணிப்பாளர் குமணன், நேர்முக உதவியாளர்கள் ராஜா( (மேல்நிலை ), வளர்மதி (உயர்நிலை) செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X