பொது செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி., நிறுவனம் 17 சதவீதம் வளர்ச்சி

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை : பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. எனப்படும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் முதல் முறையாக 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தொடர்ந்து ஆயுள் காப்பீட்டு துறையில் எல்.ஐ.சி. முதலிடத்தில் உள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் தனிப்பட்ட காப்பீடுகளில் முதல் ஆண்டிற்கான பிரீமியம் வசூல் 2020 ஜனவரியில் 17.48 சதவீதம் வளர்ச்சி கண்டு 45 ஆயிரத்து 199 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மாதம் அந்நிறுவனத்தின் பாலிசிகளின் எண்ணிக்கை 29.42 சதவீதம் உயர்ந்து 1.95 கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பு 2019 - 20ம் நிதியாண்டில் ஜனவரி வரையிலான காலத்தில் எல்.ஐ.சி. 1.42 கோடி பாலிசிகளுக்கு முதிர்வு தொகையாக 69 ஆயிரத்து 748 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரை 2.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 2.52 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருந்தது.இதே காலத்தில் எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து 7.92 சதவீதம் உயர்ந்து 29.89 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 32.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X