சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement
 கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், புத்தளி கிராமத்தில் செயல்படும் தோல் பதப்படுத்தும் கிடங்கை மூடவலியுறுத்தி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பில், உத்திரமேரூரில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.'தோல் பதப்படுத்தும் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், நிலத்தடி நீர், நிலம் மற்றும் காற்று என, சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஆதலால், கிடங்கை மூட வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.
விஸ்வநாதர் கோவிலில் வருஷாபிஷேகம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் கிராமத்தில், காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு, பிப்ரவரி, 10ம் தேதி நடந்தது. இதன் வருஷாபிஷேக விழா, நேற்று நடந்தது.காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர் சுவாமிகளுக்கு, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காசி விஸ்வநாதரை, பக்தர்கள் தரிசித்தனர்.
'கொரோனா' வைரஸ் விழிப்புணர்வு
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சார்பில், 'கொரோனா வைரஸ்' காய்ச்சல் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.முதல்வர் டாக்டர் பி.பத்மினி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மானாம்பதி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரசன்னா, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்தும், நோய் வருவதை எவ்வாறு தடுப்புதும் குறித்தும் விளக்கம் அளித்தார்; மாணவர்கள் பயனடைந்தனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பகுதி கடைகளில், பேரூராட்சி சுகாதாரத் துறையினர், நேற்று, திடீர் சோதனை நடத்தினர்.இதில், வியாபாரிகள் சிலர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியது தெரியவந்தது.இதையடுத்து, வியாபாரிகளிடமிருந்து, 6 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, மீண்டும் பயன்படுத்தினால் அபராதத் தொகை அதிகப்படுத்துவதோடு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, வியாபாரிகளை, அதிகாரிகள் எச்சரித்தனர்.
தடுப்பூசி முகாம்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், கொட்டவாக்கம் ஊராட்சி மூலபட்டு கிராமம்; புள்ளலுார் ஊராட்சி, அரங்கநாதபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில், மர்ம காய்ச்சல் நோயால், கறவை மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, கம்மவார்பாளையம் கால்நடை மருத்துவர் லட்சுமிபதி தலைமையில், கால்நடை மருத்துவக்குழுவினர், மூலபட்டு கிராமத்தில், நோயால் பாதிக்கப்பட்ட கறவை மாடுகளுக்கு, நேற்று, தடுப்பூசிகளை போட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X