பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : பிப் 11, 2020
Advertisement
 செங்கல்பட்டு குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செங்கல்பட்டு;செங்கல்பட்டு மாவட்ட, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், நேற்று நடந்தது.
அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.முகாமில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மனு மற்றும் அளித்தனர்.'தென்மேல்பாக்கம் கிராமத்தில், பல ஆண்டுகளாக வசிக்கும், 40க்கும் மேற்பட்டோர், பட்டா இல்லாததால், பசுமை வீடு வாங்க முடியாத சூழல் உள்ளது. ஆதலால், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என, கோரினர்.
'மெய்யூர் கிராமம், அம்பேத்கர் நகரில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இங்கு, குடிநீர் முறையாக வழங்குவில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறோம்' என, கிராமத்தினர் மனு அளித்தனர்.தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பசுமை வீடு, குடிநீர் உள்ளிட்டவை கோரி, 315 மனுக்கள் வரபெற்றன.இவை அனைத்தும், சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வல்லிபுரம் கிராமத்தில், எட்டு இருளர் இனத்தவருக்கு, பசுமை வீடு கட்டும் ஆணை; இயற்கை மரணம் அடைந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2.7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.பெரும்பேர்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இருளர் இன மக்களுக்கு, ஜாதி சான்றிதழ், மதுராந்தகம் தாலுகாவில், முருங்கை, மின்னல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நான்கு பேருக்கு உதவித்தொகை ஆகியவற்றை, கலெக்டர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X