அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா வைரஸ் வதந்தி பரப்பாதீர்'

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை : ''சமூக வலை தளங்களில் கொரோனா வைரஸ் குறித்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்ப வேண்டாம்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தென்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கேரளாவை ஒட்டிய எல்லையோர மாவட்டங்களில் தொடர் மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது. சீனாவில் இருந்து தமிழகம் வந்த 1854 பேர் வீட்டிலேயே தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அறிகுறி தென்பட்ட 42 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பில்லை என முடிவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை.

எனவே சமூக வலைதளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தியை பரப்ப வேண்டாம். பொதுமக்கள்அடிக்கடி கைகள் முகங்களை கழுவுவதன் வாயிலாக கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X