சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சருக்கு முன் ஜாமின் உத்தரவில் மாற்றம் கோரி முறையீடு

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை : மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய முன்ஜாமின் உத்தரவில் மாற்றம் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் முறையிடப்பட்டது.

கடந்த, ௨௦௧௧ - ௧௫ம் ஆண்டில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர், மெக்கானிக் வேலை வாங்கித் தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக, வழக்கு தொடரப்பட்டது. தற்போது, செந்தில் பாலாஜி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.இவ்வழக்கில் மேல் விசாரணை நடத்திய போலீசார், செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

இதையடுத்து, முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தேவைப்படும் போது, விசாரணைக்காக போலீஸ் முன் ஆஜராக வேண்டும்; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, முன்ஜாமின் உத்தரவில் மாற்றம் கோரி, நீதிபதியிடம் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் நேற்று முறையிட்டார்.

'முன் ஜாமின் உத்தரவு பிறப்பித்த நாளில், விசாரணைக்கு ஆஜராவதற்கான நோட்டீசும் வழங்கப்பட்டது. முன் ஜாமின் உத்தரவில் விளக்கம் பெற வேண்டும்' என, ஏ.நடராஜன் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, 'நோட்டீசில் கூறியுள்ளபடி, விசாரணைக்கு ஆஜராகலாம்; இதற்கிடையில், முன்ஜாமின் உத்தரவில் மாற்றம் கோரி, போலீஸ் தரப்பு மனு தாக்கல் செய்யலாம்' என, நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X