சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் குளித்தவர் இறப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

மாமல்லபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர், முகமது யூசூப் மகன் பிலாலுதீன், 44; தையல் கடை நடத்தினார்.நேற்று முன்தினம், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி பகுதி, தர்காவில் வழிபட, குடும்பத்துடன் வந்தார். காலை, 11:00 மணிக்கு, இங்குள்ள கடலில் குளித்தபோது, நீரில் மூழ்கினார்.அவரை மீட்டு, செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தபோது, பிலாலுதீன் இறந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற பெண்ணுக்கு, 'கம்பி'
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வணிகர் தெருவில், சிவ காஞ்சி போலீசார், திடீர் ஆய்வு நடத்தினர்.அப்போது, அங்கு நின்ற ஒரு பெண், பையில் சிறிய அளவில், 30 பாக்கெட்டுகள் கஞ்சா வைத்திருந்ததை, போலீசார் பார்த்தனர். இதையடுத்து, பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த பவானியை, 65, கைது செய்தனர். இவர், கஞ்சா விற்ற வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்.
இருவர் தற்கொலை
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், அஸ்தகிரி தெருவைச் சேர்ந்தவர் சம்பத் என்பவர் மகன் பாலாஜி, 23; தனியார் நிறுவன ஊழியர். பணிக்கு முறையாக செல்லாமல், ஊரை சுற்றித் திரிந்த பாலாஜியை, பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால், மன வேதனையடைந்த அவர், வீட்டில் யாரும் நேரத்தில், நேற்று மதியம், துாக்கிட்டு தொங்கினார். குடும்பத்தினர் தகவலையடுத்து, விஷ்ணு காஞ்சி போலீசார், அங்கு சென்று, சடலத்தை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X