இந்தியா

மீனவரை தாக்கிய இருவருக்கு வலை

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : நடுக்கடலில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

வம்பாகீரப்பாளைம், அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புண்ணியகோடி,41. மீனவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த ரமேசும் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் கடலில் பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது நண்டு வலை வீசியது தொடர்பாக இவர்களுக்கும்,நடுக்குப்பத்தை சேர்ந்த திவாகர் 28, சசிபாலன் 30 ஆகியோர், புண்ணியகோடியை இரும்பு கொக்கியால் தாக்கினர். மேலும், படகின் இன்ஜின் ஆக்சலேட்டர் ஒயரை அறுத்து விட்டு சென்றனர். இதுகுறித்து புண்ணியகோடி கொடுத்த புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்கு பதிந்து திவாகர், சசிபாலன் ஆகியோரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X