சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் கழிப்பறைக்கு பூட்டு

Added : பிப் 11, 2020
Advertisement
 கலெக்டர் ஆபீசில் கழிப்பறைக்கு பூட்டு

மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கழிப்பறைகள் பூட்டப்பட்டதால், அங்கு வரும் மக்கள், -கடும் அவதியடைந்து வருகின்றனர்
.சென்னை கலெக்டர் அலுவலக, எட்டு மாடி கட்டடத்தில், கலெக்டர் அலுவலகம், குற்றவியல் மற்றும் சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்ட, பல துறைகள் இயங்கி வருகின்றன. இதில், எட்டாவது தளத்தில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, பல்வேறு திட்டங்களுக்காக விண்ணப்பிக்க, தினமும், 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இந்த தளத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக, இரண்டு கழிப்பறைகள் உள்ளன.
இவை தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு வரும் பொதுமக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். ஊழியர்கள் பயன்படுத்தும்போது மட்டும், கழிப்பறையை திறந்து, மீண்டும் பூட்டிவிடுவதாக புகார் எழுந்துள்ளது.இந்த கழிப்பறைகளை நிரந்தரமாக திறந்து வைத்து, மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X